Enable Javscript for better performance
சேலையில் தீப்பிடித்து பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே சேலையில் தீப்பிடித்ததால் பலத்த காயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    தச்சம்பட்டை அடுத்த வேளையாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ஜெயப்பிரகாஷ் (28). இவரது மனைவி ராஜேஸ்வரி (25). இவர், கடந்த 14-ஆம் தேதி வெந்நீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற வைத்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரின் சேலையில் தீப்பிடித்துக்கொண்டதாம்.
    வலி தாங்காமல் அலறிய ராஜேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பெற்று வந்த ராஜேஸ்வரி சனிக்
    கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து, தச்சம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai