சுடச்சுட

  

  தண்டராம்பட்டு அரசு ஆண்கள் பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு

  By DIN  |   Published on : 22nd May 2017 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்திலேயே கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
  தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்காக மாவட்டத்திலேயே சிறப்பாக செயல்படும் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறது.
  அதன்படி, கடந்த 5 ஆண்டுகளாக 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சியைப் பெற்று தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சிறந்து விளங்குகிறது.
  2017-ல் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வில் 93 சதவீதத் தேர்ச்சியையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 87 சதவீதத் தேர்ச்சியையும் இந்தப் பள்ளி பெற்றுள்ளது. கடந்த 2014 - 15ஆவது கல்வி ஆண்டில் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புப் பள்ளியாக இந்தப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
  இதனடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்திலேயே கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் சிறந்த பள்ளியாக தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, சிறந்த பள்ளிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் பள்ளிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
  மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோர் பள்ளித் தலைமை ஆசிரியர் கந்தசாமியிடம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை சனிக்கிழமை வழங்கினர். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai