சுடச்சுட

    

    திருவண்ணாமலை வட்டத்தில் திருவண்ணாமலை உள் வட்டத்துக்கான ஜமாபந்தி திங்கள்கிழமை நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை உள்வட்டத்துக்கான 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இந்நிலையில், ஜமாபந்தியின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை திருவண்ணாமலை, கீழ்நாத்தூர், ஆடையூர், வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், நல்லான்பிள்ளைபெற்றாள், பள்ளிக்கொண்டாப்பட்டு, சம்மந்தனூர், நொச்சிமலை, சோ.கீழ்நாச்சிப்பட்டு, வாணியந்தாங்கல், மலப்பாம்பாடி, சு.பள்ளியம்பட்டு, சாவல்பூண்டி, கீழ் அணைக்கரை, மேலத்திக்கான், அடி அண்ணாமலை, கோசாலை, தேவனந்தல், அய்யம்பாளையம், அத்தியந்தல், ஆணாய்ப்பிறந்தான், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தம்பூண்டி கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
    எனவே, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை 10 மணி முதல் வந்து தங்களது வருவாய்த் துறை தொடர்பான குறைகள், கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று வட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai