Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பொது மாறுதல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பொது மாறுதல் கலந்தாய்வு

    By DIN  |   Published on : 22nd May 2017 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான 2017-18ஆம் ஆண்டுக்கான பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை டி.எம்.டவுன் தொடக்கப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    அதன்படி, திங்கள்கிழமை காலை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இத்துடன், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஆகியவையும் நடைபெறுகின்றன.
    எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai