Enable Javscript for better performance
பாமக செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தெற்கு, மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் இரா.காளிதாஸ் தலைமை வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட துணைத் தலைவருமான மொ.துரை, மாநில தேர்தல் பிரசார குழுத் தலைவர் கோ.எதிரொலிமணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
    குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்களின் குடிநீர்த் தேவையை மாவட்ட நிர்வாகம் தீர்த்து வைக்க வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களை
    150 நாள்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai