சுடச்சுட

  

  மாவட்டத்தில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன: ஆட்சியர் தகவல்

  By DIN  |   Published on : 22nd May 2017 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
  போளூரை அடுத்த பொத்தரை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், கால்வாய் ஓடையின் குறுக்கே தடுப்பணை மற்றும் நீர் செறிவூட்டும் குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுடன் பணியில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
  திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தண்ணீர் - தண்ணீர் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் தொழில்நுட்ப குழுக்கள் மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கேபியான் தடுப்பணைகள், நீர் செறிவூட்டு குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் 1037 தடுப்பணை பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதில், 1,000 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலகிருஷ்ணமூர்த்தி, திலகவதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai