Enable Javscript for better performance
முனுகப்பட்டில் இலவச கணினிப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் அப்துல்கலாம் சிறகுகள் அறக்கட்டளை மற்றும் முக்கூட்டு சிவன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான இலவச கணினிப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
    அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சியை தொழிலதிபர் கப்பல் இ.கங்காதரன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகிகள் தேவராஜ், சத்யா, ராம், சோலை முருகன், பட்டி ஜி.அண்ணாமலை, வழக்குரைஞர் ரேணுகாகங்காதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai