சுடச்சுட

  

  கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் சின்ன ஏரியை ரூ.24 லட்சத்தில் சீரமைக்கும் பணியை எம்எல்ஏ கு.பிச்சாண்டி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
  கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஏரிகளை சீரமைக்குமாறு தொகுதி
  எம்எல்ஏவான கு.பிச்சாண்டியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேக்களூர் சின்ன ஏரி, ஜமீன் கூடலூர் ஏரி, சொர்ப்பனந்தல் ஏரி, கீரனூர் ஏரி, காட்டுமலையனூர் ஏரி ஆகிய 5 ஏரிகளை சீரமைக்க சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
  தாய் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மேக்களூர் சின்ன ஏரி ரூ.24 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. இந்தப் பணியை சனிக்கிழமை எம்எல்ஏ கு.பிச்சாண்டி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலர் ஆராஞ்சி ஆறுமுகம், துணைச் செயலர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai