சுடச்சுட

  

  திருவண்ணாமலை சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி மையமும், புதிய பார்வை அறக்கட்டளையும் இணைந்து மழை நீர் சேகரிப்பு, யோகா விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழாவை சனிக்கிழமை நடத்தின.
  திருவண்ணாமலை சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆஸ்ரம நிர்வாகி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தா யோகா, கேட்டிங் பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலாயுதம் வரவேற்றார்.
  பேரூர் ஆதினம் சிவராம சோணாச்சல அடிகளார் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவரும், யோகாசன சாதனையாளருமான பி.வி.ஆதிசங்கரன் செங்கல் பத்மாசன விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்து காட்டினார்.
  நிகழ்ச்சியில், புதிய பார்வை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ச.பாலசுப்பிரமணியன், மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் அ.வாசுதேவன், தமிழ் ஆர்வலர் சு.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai