சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை ஸ்ரீவிசிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
    இந்தப் பள்ளியில் மொத்தம் 551 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 525 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவீதத் தேர்ச்சியாகும். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியைகளை பள்ளித் தாளாளர் வி.பவன்குமார், செயலர் டி.எஸ்.ராஜ்குமார், பொருளாளர் டி.வசந்த்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திரகுமார், டி.வி.சுதர்சன், டி.ஸ்ரீஹன்ஸ்குமார், வி.சுரேந்திரகுமார், வி.நரேந்திரகுமார் ஆகியோர் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai