சுடச்சுட

    

    அரசு மதுக் கடையை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

    By DIN  |   Published on : 24th May 2017 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆற்காடு அருகே அரசு மதுக் கடையை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    ஆற்காட்டை அடுத்த வரகூர் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து,   கடையை முற்றுகையிட்டனர். மேலும், கடையில் இருந்த மது பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்தனர்.
    இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக வரகூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (34), இளையராஜா (32), இளங்கோ (42) ஆகிய மூன்று பேரை செவ்வாய்க்கிழமை  கைது செய்து விசாரித்து
    வருகின்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai