சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  இதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
  மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
  மற்ற ஊர்களில்...: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai