சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 24th May 2017 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு அருகே குடிநீர் கோரி செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தண்டராம்பட்டை அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமம், கே.கே. நகரில் 300-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
    இதுகுறித்து, தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அண்மையில் தண்டராம்பட்டு - அரூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது, அங்கு வந்த தானிப்பாடி போலீஸார், தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக அதிகாரிகள், 2 நாள்களில் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தனராம்.
    ஆனால், ஒரு வாரத்துக்கு மேலாகியும் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மீண்டும் தண்டராம்பட்டு - அரூர் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்த அரசுப் பேருந்து ஒன்றையும் பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
    தகவலறிந்து வந்த தானிப்பாடி போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த முறை கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai