சுடச்சுட

    

    திருவண்ணாமலை, போளூர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.
    திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3-ஆவது நாள் ஜமாபந்தி கூட்டத்துக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், துரிஞ்சாபுரம் உள்வட்டத்துக்கு உள்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி, ஊசாம்பாடி, சொரந்தை, களஸ்தம்பாடி, சடையனோடை, சானானந்தல், முனியந்தல், இனாம்காரியந்தல், வெங்காயவேலூர், சொரகொளத்தூர், வடகருங்காலிபாடி, மாதலம்பாடி, வடகரிம்பலூர், கூத்தலவாடி, கருந்துவாம்பாடி, கொளக்கரவாடி, பிச்சனந்தல், சீலபந்தல், இனாம்வெளுகனந்தல் மற்றும் தச்சம்பட்டு உள்வட்டத்துக்கு உள்பட்ட காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, சின்னகல்லப்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
    இதில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 937 மனுக்கள் பெறப்ட்டன. இவற்றில் 115 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    முகாமில், வட்டாட்சியர் ரவி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார், துரிஞ்சாபுரம் மண்டல துணை வட்டாட்சியர் அமுல், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் பார்த்தசாரதி, தலைமை நில அளவர் ஆர்.வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை தச்சம்பட்டு உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
    போளூர்: இதேபோல, சந்தவாசல் பிர்காவைச் சேர்ந்த சந்தவாசல், இலுப்பகுணம், அனந்தபுரம், படவேடு, வெள்ளூர் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமையில் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்தில், சிறு, குறு விவசாயச் சான்று, மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்பட 114 பேருக்கு நலத் திட்ட உதவி வழங்கப்பட்டன. இதில், வட்டாட்சியர் புவனேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் தேவேந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, தனி வட்டாட்சியர் வேடியப்பன், தலைமையிடத்து வட்டாட்சியர் குப்புசாமி, மண்டல துணை வட்டாட்சியர் முகமதுஅலிஜின்னா, வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், செந்தில்நாதன் உள்பட வருவாய்த் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai