சுடச்சுட

  

  திருவண்ணாமலை - சென்னை இடையே தினமும் பயணிகள் ரயில் இயக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 24th May 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
  திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி எம்.சாகித் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.அமீன், மாவட்ட துணைச் செயலர் ஜி.அப்துல் மவ்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  அமைப்பின் நிறுவனர் பி.ஜைனுல்ஆப்தீன், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் ஆர்.ரஹமத்துல்லா, பேச்சாளர் அஷ்ரப்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
  மாநாட்டில், இந்தியாவில் தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் தவறிய பிரதமர் மோடியை வன்மையாகக் கண்டிப்பது. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.
  திருவண்ணாமலையில் இருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்ல போதிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ரயில் சந்திப்பு நிலையமாக (ஜங்ஷன்) மாற்ற வேண்டும். திருவண்ணாமலையில் இருந்து தினமும் சென்னைக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மாநாட்டில், அமைப்பின் மாவட்டச் செயலர் எஸ்.என்.நபிஜான், மாவட்டப் பொருளாளர் சி.காதர்ஷரீப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai