சுடச்சுட

  

  ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் புரவலர்களுக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
  இதில், வாசகர் வட்டத் தலைவர் பி.சி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி எம்.நடராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்.வெங்கடேசன் வரவேற்றார்.
  விழாவில், கண்ணமங்கலம் கிளை நூலகத்துக்கு இந்து ஆரம்ப பாடசாலையில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த இடத்தில் ஆரணி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிரந்தர கட்டடம் கட்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பது என்றும், மேலும், மாவட்ட ஆட்சியரிடமும் இது தொடர்பாக கோரிக்கை விடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  இதில், புரவலர்களான பி.கே.அன்பரசி, பி.கே.செல்வபாண்டியன், கே.வி.கங்கைஅமரன், வெங்கடேசன், ரோஸ்முத்து ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai