Enable Javscript for better performance
பள்ளி மாணவிக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை பள்ளி மாணவியின் பரத நாட்டியத்தைப் பாராட்டி, நடன தாரகை விருது வழங்கப்பட்டது.
    திருவண்ணாமலை ஸ்ரீதண்டபாணி ஆசிரமம், மலேசிய பத்திரிகை இணைந்து திருவண்ணாமலையில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவை திங்கள்கிழமை நடத்தின.
    விழாவுக்கு, ஆஸ்ரம நிர்வாகி எல்.சீனுவாசன் தலைமை வகித்தார்.
    மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
    விழாவில், திருவண்ணாமலை பள்ளி மாணவி ப.நந்தினியின் பரத நாட்டியத்தைப் பாராட்டி, அவருக்கு நடன தாரகை என்ற விருதை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் வழங்கி பேசினார்.
    மேலும், மலேசியாவைச் சேர்ந்த குணாளன் மணியம், டாக்டர் ஆர்.குப்புசாமி, குமரன் அடைக்கலம் உள்பட பலருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், வாலைச் சித்தர், டாக்டர் லட்சுமி நாராயணன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai