சுடச்சுட

    

    புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th May 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுபானங்கள் விற்பனையைத் தடுக்கக் கோரி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு மதுக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதை காவல் துறையினர் தடுக்கக் கோரியும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். இதில், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா பாக்கெட்டுகளை கிழித்து தரையில் கொட்டி முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டத்தில் ஜமாபந்தி அலுவலரான குணசேகரனிடம் விவசாயிகள் சங்கத்தினர் அளித்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai