Enable Javscript for better performance
மங்கலம் புதூர் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா- Dinamani

சுடச்சுட

    

    மங்கலம் புதூர் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா

    By DIN  |   Published on : 24th May 2017 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
    இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை பூங்கரகம் வீதியுலா நடைபெற்றது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பூங்கரகத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
    பிற்பகல் 2 மணிக்கு கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னர், விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு புராண நாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள், பொதுமக்கள்
    செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai