சுடச்சுட

  

  மதுரைபெரும்பட்டூர் கிராமத்தில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி: திரளான பொதுமக்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 24th May 2017 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேத்துப்பட்டை அடுத்த மதுரைபெரும்பட்டூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  மதுரைபெரும்பட்டூர் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி அலகு நிறுத்தி, 22 நாள் அக்னி வசந்த விழா தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் திருவண்ணாமலை சொற்பொழிவாளர் ஜெயராமனின் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. ஸ்ரீமான் நாராயணமூர்த்தி நாடக மன்றத்தினரால் மகாபாரத கட்டைகூத்தும் நடைபெற்றது.
  விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலை 10 மணியளவில் கோயில் வளாகத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவத்தின் முன் பீமன், துரியோதனன் வேடமணிந்த நாடகக் கலைஞர்கள் படுகள நாடகத்தை நடத்திக் காட்டினர்.
  மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. திரெளபதி அம்மனுக்கு விரதமிருந்து வந்த திரளான ஆண்களும், பெண்களும் மஞ்சளாடை அணிந்து தீமிதித்தனர். பின்னர், அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. புதன்கிழமை காலை தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக்
  குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai