சுடச்சுட

  

  போளூர் அருகே செவ்வாய்க்கிழமை முன்விரோதம் காரணமாக 2 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சி, செல்வம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (22). இவருக்கும், போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறதாம்.
  இந்நிலையில், கணபதியும், புலிவானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் சொந்த வேலையாக போளூர் சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு மீண்டும் கிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
  போளூர் நெடுஞ்சாலை அருகே சென்றபோது, ரவிச்சந்திரனும், அவரது கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ்சர்மா (22), வெங்கடேசன் (21), விக்னேஷ் சந்திரன் (23), ராஜசேகர், ஆண்போ ஆகிய 5 பேரும் சேர்ந்து கணபதி, செல்வத்தை வழி மடக்கி தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த கணபதி, செல்வம் ஆகியோர் போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் கணபதி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரவிச்சந்திரன், நித்திஷ்சர்மா, வெங்கடேசன், விக்னேஷ் சந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai