சுடச்சுட

  

  வீட்டில் பதுக்கிய புதுச்சேரி மதுப் பாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

  By DIN  |   Published on : 24th May 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை கள்ளத்தனமாக விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 130 மதுப் பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், ஒருவரை கைது செய்தனர்.
  வந்தவாசியை அடுத்த மீசநல்லூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் குமரன் (31). இவரது வீட்டில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக புதுவை மாநில மதுப் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெள்ளாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
  அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தததில், அந்த வீட்டில் 130 மதுப் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
  இதைத் தொடர்ந்து, மதுப் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், குமரனையும் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai