சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு: 197 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி அளிப்பு

    By DIN  |   Published on : 25th May 2017 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், 157 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி வழங்கினார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் கடந்த 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது.
    இதன் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு வட்டாட்சியர் சுகுணா தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வெங்கடேசன் வரவேற்றார். திருவண்ணாமலை கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான உமா மகேஸ்வரி, கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி ஆகியோர் 197 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், இருளர் சாதிச்சான்று, பிறப்புச் சான்று, நத்தம் சிட்டா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
    இதில், தலைமையிடத்து நில அளவர் சேகர், ஒன்றிய திமுக செயலர் ஆராஞ்சி ஆறுமுகம், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அக்கண்டராவ், பேரூராட்சி செயல் அலுவலர் மோகன், வருவாய் ஆய்வாளர்கள் தனபால், கலையரசி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai