சுடச்சுட

  

  செய்யாறில் புதன்கிழமை தனியார் பள்ளிகளின் 48 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 8 வாகனங்கள் தகுதியில்லாதவை என திருப்பி அனுப்பப்பட்டன.
  செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய 3 வட்டங்களில் உள்ள தனியார் பள்ளிப் பேருந்துகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மூலம் தகுதிச் சான்று வழங்கப்படுவது வழக்கம். இந்தத் தகுதிச் சான்று பெற்ற பின்னரே பள்ளி பேருந்துகள், வேன்களை சாலைகளில் இயக்க முடியும்.
  இந்நிலையில், விழுப்புரம் பறக்கும் படை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அசோகன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெ.ராமரத்தினம் ஆகியோர் பள்ளி, கல்லூரிப் பேருந்து, வேன்களை புதன்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தீயணைப்பு கருவி, முதலுதவி மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், அவசர வழி ஆகியன பேருந்துகளில் உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  அப்போது, 8 வாகனங்களில் தீயணைப்பு கருவி, முதலுதவிப் பெட்டி ஆகியவை இல்லாததும், அவரச வழி திறக்கும் நிலையில் இல்லாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, குறைபாடுகள் உள்ள 8 வாகனங்களையும் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அசோகன் அறிவுறுத்தி திருப்பி அனுப்பினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai