Enable Javscript for better performance
செய்யாறில் திருட்டு விசிடி தயாரிப்பு: 3 பேர் கைது: புரஜெக்டர்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் திருட்டு விசிடி தயாரிப்பு: 3 பேர் கைது: புரஜெக்டர்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 25th May 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள 3 திரையரங்குகளில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக குறுந்தகட்டில் (விசிடி) பதிவு செய்து விற்றதாக  ஆபரேட்டர்கள் 3 பேரை திருட்டு விசிடி தடுப்புப் போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புரஜெக்டர் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    செய்யாறு பகுதியில் உள்ள திரையரங்குகளில் அண்மையில் வெளிடப்பட்ட கடம்பன், ப.பாண்டி, மாநகரம் ஆகிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்டு, அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வேலூர், கடலூர் பகுதிகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சென்னை தலைமையகத்தில் உள்ள திருட்டு விசிடி தடுப்பு சிறப்புப் போலீஸில் புகார் அளித்தனர்.
    அதன் பேரில், வேலூர் காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில், வேலூர் திருட்டு விசிடி தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் கடலூர், சென்னை போலீஸார் அடங்கிய 11 பேர் குழுவினர் செய்யாறில் உள்ள 3 திரையரங்குகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
    அப்போது, அந்தத் திரையரங்குகளில் திரைப்படங்களை குறுந்தகடுகளில் (விசிடி) திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகத் தெரிகிறது.
    3 ஆபரேட்டர்கள் கைது: இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் திருட்டு விசிடி தடுப்புப் போலீஸார் வழக்குப் பதிந்து, திரையரங்க ஆபரேட்டர்களான நாராயணன் (39), சிவகுமார் (36), கோபாலகிருஷ்ணன் (44) ஆகிய மூவரை கைது செய்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    இந்த நிலையில், செய்யாறில் உள்ள 3 திரையரங்குகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai