Enable Javscript for better performance
முதுகலை, தொழில்கல்விஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    முதுகலை, தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

    By DIN  |   Published on : 25th May 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை, தொழில்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாறுவதற்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - 18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது.
    வரும் 31-ஆம் தேதி வரை திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாறுவதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
    எனவே, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் உரிய நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai