Enable Javscript for better performance
மும்முனி கிராமக் குளத்தைத் தூர்வாரும் பணி: எம்எல்ஏ எ.வ.வேலு தொடக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    மும்முனி கிராமக் குளத்தைத் தூர்வாரும் பணி: எம்எல்ஏ எ.வ.வேலு தொடக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 25th May 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள குளத்தை திமுக சார்பில் தூர்வாரும் பணியை எம்எல்ஏ எ.வ.வேலு புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
    தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் திமுக சார்பில் தூர்வாரப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவித்தார். இதையொட்டி, வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியை திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எ.வ.வேலு தொடக்கி வைத்தார்.
    திமுக மாவட்டச் செயலர் சிவானந்தம், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், சுரேஷ்கமல், நந்தகோபால், நகரச் செயலர் கோட்டை பாபு உள்ளிட்டோரும் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai