சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் நீடித்த, நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க உழவுப் பணி பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் கீழ்பென்னாத்தூர், சிறுநாத்தூர், சோமாசிபாடி ஊராட்சிகளில் நீடித்த, நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் இடு பொருள்கள் வழங்கப்படுகின்றன. உழவு மேற்கொள்ள உரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
    அதன்படி, சோமாசிபாடி கிராமத்தில் உழவுப் பணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், வேளாண் துணை இயக்குநர்கள் ஜெயபால், வேல்முருகன், கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அக்கண்டராவ், உதவி வேளாண் அலுவலர் சிவானந்தம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai