சுடச்சுட

    

    15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th May 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளில் சாலைப் பணியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.ராஜேந்திரன், இணைச் செயலர் கே.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜி.ரவி வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர் கா.பெருமாள், மாநிலச் செயலர் ஆர்.சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில், சாலைப் பராமரிப்பு பணியை தனியாரிடம் அளிக்கும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தை கைவிட வேண்டும். காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    8-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை திறப்பதற்காக மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை மாநகராட்சி, நகராட்சியிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஏழுமலை, மாவட்டச் செயலர் எஸ்.சிவக்குமார், மாவட்டப் பொருளாளர் கே.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆரணி: இதேபோல, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் ஆரணி பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதில், மாநிலச் செயலர் ஆர்.சண்முகம் கண்டன உரையாற்றினார். வட்டத் தலைவர் எஸ்.பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் எஸ்.தொல்காப்பியன் வரவேற்றார்.
    வட்டச் செயலர் எஸ்.நந்தகுமார், கோட்டத் தலைவர் ஆர்.ஆல்அரசன், கோட்டச் செயலர் கே.எம்.உதயகுமார், கோட்டப் பொருளாளர் எல்.சரவணன், நிர்வாகிகள் ஆர்.ஏழுமலை, எஸ்.உதயகுமார், வி.அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai