Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வைகாசி அமாவாசையையொட்டி, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி அமாவாசையன்று உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு வைகாசி அமாவாசை தினமான வியாழக்கிழமை கோயிலில் உள்ள உற்சவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு பன்னீர், தயிர், பால், தேன், நெய் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai