சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை, பல்லவன் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சிலம்பரசன் (32). கடந்த 14-ஆம் தேதி திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சிலம்பரசன் மது அருந்திக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த திருவண்ணாமலை, முத்து விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்தி (27), குமார் (31), பொரி (28) ஆகியோர் சிலம்பரசனிடம் மது வாங்கித் தருமாறு கேட்டனராம்.
    அதற்கு, தன்னிடம் பணம் இல்லை என்று சிலம்பரசன் கூறினாராம். எனவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் உள்பட மூவரும் சேர்ந்து சிலம்பரசனை தாக்கி, பீர் பாட்டிலால் குத்தினராம். இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து குமார், கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai