சுடச்சுட

  

  இரும்பேடு 4 முனைச் சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

  By DIN  |   Published on : 26th May 2017 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரணியை அடுத்த இரும்பேடு பகுதியில் உள்ள 4 முனைச் சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
  இரும்பேடு பகுதியில் ஆரணி - ஆற்காடு, செய்யாறு - வேலூர் சாலைகள் சந்திக்கும் 4 முனை சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு, விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, இங்கு போலீஸார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இரும்பேடு பகுதியில் உள்ள
  4 முனை சந்திப்பில் 4 கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் இருந்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai