சுடச்சுட

  

  திருவண்ணாமலை இறைபணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
  திருவண்ணாமலை இறைபணி மன்றத்தின் நிறுவனரும், செயலருமான சு.சண்முகம் கடந்த 9-ஆம் தேதி தனது 94-ஆவது வயதில் இயற்கை எய்தினார். இதையடுத்து, மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
  இதில், மன்றத்தின் கெளரவத் தலைவராக முன்னாள் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம், அவைத் தலைவராக சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் பா.இந்திரராஜன், காப்பாளராக டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளித் தலைவர் மா.சின்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  மேலும், மன்றத்தின் ஆலோசகர்களாக வ.தனுசு, பி.இராமச்சந்திர உபாத்தியாயா, தலைவராக வ.தாமோதரன், செயலராக கிருஷ்ண கஜேந்திரன், பொருளாளராக மு.மண்ணுலிங்கம், துணைத் தலைவர்களாக சோ.முத்து, லதா பிரபுலிங்கம், துணைச் செயலர்களாக ச.முருகன், ச.சீனுவாசன், ஒருங்கிணைப்பாளராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தொடர்பு அலுவலராக சா.சிவசங்கரன் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  முன்னதாக, 1957-ல் இறைபணி மன்றத்தை நிறுவி, கடந்த 60 ஆண்டுகளாக 1,359 நிகழ்ச்சிகளை நடத்திய நிறுவனர் சு.சண்முகனாருக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai