சுடச்சுட

  

  கோயில் சார்பில் வைக்கப்பட்ட பதாகை கிழிப்பு: ஒருவர் கைது

  By DIN  |   Published on : 26th May 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் ரேணுகாம்பாள் அம்மன் கோயில் சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையைக் கிழித்ததாக திமுகவைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
  முள்ளண்டிரம் ரேணுகாம்பாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயில் சார்பில் முதல்வர் படம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் படத்துடன் வரவேற்பு விளம்பரப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த பாலாஜி, பாபு, குமரன், ராஜேந்திரன், பிரபாகரன் ஆகியோர் புதன்கிழமை இரவு அந்தப் பதாகையை கிழித்து தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறப்படுகிறது.
  இதனை அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பழனி உள்ளிட்ட அதிமுக அம்மா அணியினர் தட்டிக்கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து ஆரணி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாலாஜியை கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai