சுடச்சுட

  

  திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
  கூட்டத்தில் மாணவரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது, ஆரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கில் பங்கேற்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டன.
  கூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், வந்தவாசி எம்எல்ஏவுமான எஸ்.அம்பேத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் டி.கே.அருள், ஈ.மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் கோட்டை பாபு வரவேற்றார்.
  திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் வ.அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேலும், மாணவரணி நிர்வாகிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
  ஒன்றியச் செயலர்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, ஆர்.நந்தகோபால், எஸ்.சுரேஷ்கமல், கே.டி.ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வி.ராமு, எல்.அப்சர்லியாகத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai