சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் இன்று தெற்கு உள் வட்டத்துக்கான ஜமாபந்தி

  By DIN  |   Published on : 26th May 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை தெற்கு உள் வட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
  திருவண்ணாமலை வட்டத்துக்கான 1426-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  ஜமாபந்தியின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை தெற்கு உள் வட்டத்துக்கு உள்பட்ட சமுத்திரம், நல்லவன்பாளையம், அரசாப்பட்டு, சு.பாப்பாம்பாடி, கீழ்கச்சிராப்பட்டு, மேல்புத்தியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, தென்மாத்தூர், உடையானந்தல், மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், மஞ்சம்பூண்டி, கீழ்செட்டிப்பட்டு, அரசுடையாம்பட்டு, கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது.
  எனவே, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்களது வருவாய்த் துறை தொடர்பான குறைகள், கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று வட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai