Enable Javscript for better performance
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பொது மாறுதல் கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பொது மாறுதல் கலந்தாய்வு

    By DIN  |   Published on : 26th May 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் வெள்ளிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான 2017-18ஆம் ஆண்டுக்கான பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கி, நடைபெற்று வருகிறது.
    திருவண்ணாமலை டி.எம்.டவுன் தொடக்கப் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி
    அலுவலர் ஏ.ராஜேந்திரன் தலைமையில் இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடைபெறுகிறது.
    இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai