Enable Javscript for better performance
பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்படும்: அமைச்சர் சி.விஜயபாஸ்- Dinamani

சுடச்சுட

    

    பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்படும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

    By DIN  |   Published on : 26th May 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வந்தது. திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி வந்தபிறகு, மாவட்ட தலைமை மருத்துவமனை முறையாக செயல்படாமல் முடங்கி விட்டது.
    எனவே, இந்த மருத்துவமனையை முன்புபோல 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை நகர மக்கள், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகதார நிலையம் விரைவில் தொடங்கப்படும்.
    இங்கு, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு, முதியவர்களுக்கான தனிப் பிரிவுகள் இயங்கும். 108 ஆம்புலன்ஸ் வசதியும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் திருவண்ணாமலை நகர மக்களும், கிரிவல பக்தர்களும் பெரிதும் பயன்பெறுவர். கிரிவலம் வரும் நாள்களில் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் முழுமையாக செயல்படும் என்றார்.
    முன்னதாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai