சுடச்சுட

    

    செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது ஆட்டோ மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தார்.
    வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், பொன்னாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் மனைவி உஷா (32). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மணல்மேடு கிராமத்தில் உள்ள தாயார் வீட்டில் உஷா தங்கி, செய்யாறு சிப்காட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    இந்நிலையில், உறவினர் தங்கராஜுடன் உஷா செவ்வாய்க்கிழமை பைக்கில் வேலைக்குச் சென்றார். சோதியம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, பைக் மீது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோதியதாகத் தெரிகிறது.
    இதில் பலத்த காயமடைந்த உஷா, தங்கராஜ் ஆகியோர் மீட்கப்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த உஷா புதன்கிழமை உயிரிழந்தார். விபத்து குறித்து தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai