Enable Javscript for better performance
முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-ஆவது திருமணம் செய்த விவசாயி கைது- Dinamani

சுடச்சுட

    

    முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-ஆவது திருமணம் செய்த விவசாயி கைது

    By DIN  |   Published on : 26th May 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை அருகே முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-ஆவது திருமணம் செய்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த ஐய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரஞ்சித்குமார் (26). இவரது மனைவி சத்தியா (23). இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    இந்நிலையில், ரஞ்சித்குமாருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (19) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாம். எனவே, சத்தியாவை ரஞ்சித்குமார் அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்தாராம். மேலும், சத்தியாவை அடிக்கடி கருக்கலைப்பு செய்ய வைத்தாராம்.
    ரஞ்சித்குமாரின் பெற்றோரான சிவப்பிரகாஷ் (50), சின்னக்கண்ணு (48) ஆகியோரும் தங்கள் மகனை விட்டுப் பிரிந்து செல்லுமாறு கூறி சத்தியாவை கொடுமைப்படுத்தினராம்.
    இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீயை ரஞ்சித்குமார் 2-ஆவதாக திருமணம் செய்துகொண்டாராம். இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்தியா புதன்கிழமை புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். தலைமறைவான மாமனார் சிவப்பிரகாஷ், மாமியார் சின்னக்கண்ணு, ஜெயஸ்ரீ
    ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai