சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
    மாவட்டத்தில் 2017 - 18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    வரும் 31-ஆம் தேதி வரை திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி, சனிக்கிழமை அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
    இந்தக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் உரிய நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai