சுடச்சுட

    

    சேத்துப்பட்டு ஒன்றியம், அரியத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆற்றங்கரைப் பகுதியில் 3 மாதங்களாகச் சீரமைக்கப்படாமல் உள்ள கைப்பம்பை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    அரியத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆற்றங்கரை பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2013 - 2014ஆம் ஆண்டு ஊராட்சி நிதியில் இருந்து ஆழ்துளை கிணறுடன் கூடிய கைப்பம்பு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
    இந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் உள்ள நிலையில், இதில் உள்ள கைப்பம்பு கடந்த 3 மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனை சரிசெய்ய வலியுறுத்தி ஊராட்சிச் செயலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் அந்தப் பகுதி மக்கள் மனு அளித்தனர்.
    இதையடுத்து, கடந்த மாதம் இந்தக் கைப்பம்பை பழுது நீக்கம் செய்யத் தேவையான பொருள்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. எனினும், இந்தக் கைப்பம்பு இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் எடுக்க வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
    எனவே, இந்தக் கைப்பம்பை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அந்தப் பகுதி மக்கள்
    தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai