சுடச்சுட

  

  குண்டும்,  குழியுமாக காட்சியளிக்கும் செங்கம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
  செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மண்மலை, செ.நாச்சிப்பட்டு கூட்டுச்சாலை ஆகிய இரண்டு இடங்களில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
  இந்தச் சாலை புதிதாக போடப்பட்டது என்பதால், வாகன ஓட்டிகள் சாலையில் அதிவேகமாகச் செல்கின்றனர். அப்போது, மேற்கூறிய 2 இடங்களில் உள்ள பழுதடைந்த சாலையை பார்த்தவுடன் வாகனத்தின் வேகத்தை குறைக்க முற்படுவதால், அந்தப் பகுதிகளில் விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், லேசான மழை பெய்தாலே இந்தப் பகுதிகளில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் வாகனத்தை விடும்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, அதிக போக்குவரத்தைக் கொண்ட செங்கம் - திருவண்ணாமலை சாலையில் மேல்மண்மலை, செ.நாச்சிப்பட்டு கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் குண்டும், குழியுமான பகுதிகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai