Enable Javscript for better performance
இடி தாக்கி உயிரிழந்தோரின்குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    இடி தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் கோரிக்கை

    By DIN  |   Published on : 28th May 2017 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே அரிசி ஆலையில் இடி தாக்கியதில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
    இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    செங்கம் அருகே அரிசி ஆலையில் இடி தாக்கியதில் உயிரிழந்த தலித் பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும்.
    காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சையும், வாழ்வாதாரத்துக்கு நிவாரணமும் வழங்க வேண்டும்.
    செங்கம் பகுதியில் அரிசி ஆலை, பட்டாசு கிடங்கு உள்ளிட்ட தொழிற்சாலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செங்கம் பகுதியில் நிகழ்ந்த பட்டாசு கிடங்கு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மிக தாமதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இழப்பீடு வழங்கப்பட்டது.
    அதுபோல இல்லாமல் விரைவாக இழப்பீடு உதவிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், தொழிற்சாலைகளில் தொழில்சட்டங்களை நடைமுறைப்படுத்தி, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட கூலியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai