சுடச்சுட

    

    இடி தாக்கி பெண்கள் உயிரிழந்த பகுதியில் அமைச்சர் ஆய்வு

    By DIN  |   Published on : 28th May 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தளவாய்நாய்க்கன்பேட்டை பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலையில் இடி தாக்கி 5 பெண்கள் உயிரிழந்த பகுதியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
    செங்கத்தை அடுத்துள்ள தளவாய்நாய்க்கன்பேட்டை பகுதியில் ஆசிம்கான் மகன் நவஷாத் (54) என்பவர் நவீன அரிசி ஆலை நடத்தி வருகிறார்.
    இங்கு வெள்ளிக்கிழமை இரவு இடி தாக்கியதில் அங்கு இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களான செ.சொர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆரவள்ளி, ஆண்டாள், குமுதா, மீனா (எ) செல்வி, தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த ரேணு ஆகியோர் உயிரிழந்தனர்.
    மேலும், செ.சொர்ப்பனந்தல் பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள், தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த அருளம்மாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் சடலங்கள் உடல்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து செங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அமைச்சர் ஆய்வு: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினரை சனிக்கிழமை காலை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    பின்னர், இடி தாக்கிய நவீன அரிசி ஆலைப் பகுதியில் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், விபத்து குறித்து கேட்டறிந்தார்.
    அப்போது, இறந்துபோன 5 பேரின் குடும்பங்களுக்கும் அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai