சுடச்சுட

  

  செய்யாறில் நடைபெற்று வரும் ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு நாளான வரும் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது.
  செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 1426-ஆம் பசலி ஆண்டுக்கான செய்யாறு வட்ட வருவாய்த் தீர்வாயக் கணக்கு தணிக்கை ஆய்வு (ஜமாபந்தி) திருவண்ணாமலை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பொ.குணசேகரன் தலைமையில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தியின்போது நிலவரி கணக்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
  விவசாயிகள் மாநாடு:
  ஜமாபந்தியின் நிறைவாக செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மாலை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆரணி தொகுதி எம்.பி செஞ்சி  வெ.ஏழுமலை, செய்யாறு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு வருவாய்த் துறை சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
  ஏற்பாடுகளை செய்யாறு வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai