சுடச்சுட

    

    வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமையில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    தெள்ளாறு மற்றும் ஓசூர் உள் வட்டங்களைச் சேர்ந்த 13 கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 98 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, மொத்தம் 98 பேருக்கு பட்டா மாற்றம், சிறுகுறு விவசாயச் சான்று, தீ விபத்து நிவாரணம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.
    வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், கே.ஆர்.நரேந்திரன், துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி, தியாகராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ், அகத்தீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai