சுடச்சுட

    

    மாதலம்பாடி கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணி: ஆட்சியர் தொடக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 28th May 2017 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், மாதலம்பாடி கிராமத்தில் சித்தேரிக்குச் செல்லும் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
    மாதலம்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், சித்தேரிக்கு செல்லும் ஓடையின் குறுக்கே ரூ.92 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடக்கி வைத்ததுடன், தொழிலாளர்களுடன் இணைந்து 2 மணி நேரம் அவரும் பணியில் ஈடுபட்டார்.
    பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 66 தடுப்பணைகள் கட்டும் பணியில் இதுவரை 10 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 56 தடுப்பணைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றார்.
    மாதலம்பாடி கிராமத்தில் நடந்த இந்த தடுப்பணை கட்டும் பணியில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பி.பி.முருகன், தனி அலுவலர் என்.கிருஷ்ணமூர்த்தி, உதவிச் செயற்பொறியாளர் ஹரிகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.வெங்கடேசன், ஊராட்சிச் செயலர் எம்.திருமாறன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai