Enable Javscript for better performance
இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்தி- Dinamani

சுடச்சுட

    

    இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

    By DIN  |   Published on : 29th May 2017 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இடி தாக்கி உயிரிழந்த 5 பெண்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக, தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
    செங்கத்தை அடுத்த தளவாய்நாய்க்கன்பேட்டை பகுதியில் உள்ள நவீன அரிசி ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு இடி தாக்கியது. இதில், அங்குள்ள புகைக்கூண்டு சரிந்து விழுந்ததில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களான சொர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆரவள்ளி (55), ஆண்டாள் (50), குமுதா  (51), மீனா (எ) செல்வி (48), தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த ரேணு (49) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
    மேலும், சொர்ப்பனந்தல் பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள், தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த அருளம்மாள் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
    உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி, உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினரிடம் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
    மேலும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் குப்பம்மாள், அருளம்மாள் ஆகிய இருவருக்கும் தலா ரூ.12,700-க்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
    உடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai