சுடச்சுட

    

    போளூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் சத்தியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முருகன் (கர்நாடகம்)
    கலந்துகொண்டு, இளைஞர்களை பெருமளவு காங்கிரஸ் கட்சியில் சேர்க்க கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும், கிராமங்கள்தோறும் கட்சிக் கொடிக்கம்பத்தை புதுப்பித்து கொடியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    மாவட்ட துணைத் தலைவர்கள் மணவாளன், கிருஷ்ணமூர்த்தி, வட்டாரத் தலைவர்கள் ஏழுமலை, குமார், வெங்கடாசலம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai